Mr. சிவயோகநாதன் வைத்தியலிங்கம்

13769354_10154007754529550_6175810906410619584_n

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் , கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகநாதன் வைத்தியலிங்கம் ஞாயிறு ( 17/07/2016 ) அன்று காலமானார் , அன்னார் காலஞ்சென்ற வைத்தியலிங்கம் , வள்ளிப்பிள்ளையின் மகனும் , காலஞ்சென்ற பாக்கியலக்‌ஷ்மியின் அன்புக்கணவரும் , துளசி சிவகுமார் , விஜயலக்‌ஷ்மி ரவீந்திரன் ( Australia ) ஆகியோரின் தந்தையும் , சிவகுமார் ( ஓய்வுபெற்ற சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் ADG ) , ரவீந்திரன் ( Australia ) ஆகியோரின் மாமனாரும் , வைதேகி முகுந்தன் , மிதிலா , யதுகுலன் ஆகியோரின் பேரனுமாவார் .

அன்னாரின் பூதவுடல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை ( 19/07/2016 ) காலை 9 மணிமுதல் வைக்கப்பட்டிருக்கும் . கிரியைகள் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு பூதவுடல் கனத்தை பொது மையானத்தில் தகனம் செய்யப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தகவல்

துளசி (மகள்)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*