க.பொ.த உயர்தரப் பரீட்சை நெல்லியடி மத்திய கல்லூரி யாழில் முதலிடம்.

உயர்தரப் பரீட்சை முடிவு! யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில், உயிரியல் கணிதப்பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

இதேவேளை, உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

result_1st_jaffna_003 (1)

வர்த்தக பிரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

நெல்லிய மத்திய கல்லூரி மாணவர்களில் அதியுயர் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் விபரம்.

12472233_10153716338216628_8994459912860950630_n

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*